ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது டிக்டாக் நிறுவனம்!ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது டிக்டாக் நிறுவனம்!

டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் விரைவில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் திட்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பைட் டான்ஸ் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டார்ட்ஆப் நிறுவனங்களின் செய்தி, வீடியோ மற்றும் விளையாட்டு ஆப்கள் ப்ரீ லோடடாக இருக்குமாம்.

சென்ற ஜனவரி மாதம், சீன போன் உற்பத்தி நிறுவனமான ஸ்மார்டிசனை பைட் டான்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.

ஆனால் இப்போது வரை பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்திக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வருவதால், சீனா நிறுவனங்களால் மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் செய்வது சிக்கலாக உள்ளது.

வர்த்தகப் போர் தீர்வுக்கு வந்தபிறகு பைட் டான்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் கவனம் செலுத்தும். அதுவரையில் செயலிகள் வணிகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் எண்ணத்தில் பை டான்ஸ் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் மிகப் பெரிய வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனமாக பைட் டான்ஸ் உள்ளது. இந்தியாவில் பைட் டான்ஸ்-க்கு சொந்தமான டிக்டாக் செயலியை 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விரைவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி ஒன்றை பைட் டான்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்காக டி-சீரிஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

© 2018 Vettipo | All Rights Reserved.