உலக அளவில் டிரெண்டாகும் ’நேர்கொண்ட பார்வை’ டிரைலர்!ajith-nerkonda-parvai-trailer-trend-in-twitter-world-wide

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாகும் முன்பே ட்விட்டரில் உலக அளவில் டிரண்டாகியுள்ளது. 

நடிகர் அஜித்துக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளவர் அஜித். அஜித்தின் ஒரு படம் வெற்றி பெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி. அந்த படம் குறித்து எதையாவது தேர்ந்தெடுத்து டிரண்டாக்கி விடுவது அவரது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அதன்படி தற்போது படம் மட்டும் இல்லை. டிரைலர் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் உலக அளவில் டிரண்டாகியுள்ளது அஜித்தின் நேர்கொண்டபார்வை. 

நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழில் முதல் படம்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அஜித் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக் குழுவினர் வெளி்யிட்டுள்ளனர். 

இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் நேர்கொண்டபார்வை படத்தின் டிரைலர் வெளியாகும் முன்பே டிவிட்டரில் உலக அளவில் #NerKondaPaarvaiTrailer என்ற பெயரில் டிரண்டாகியுள்ளது. இது அஜித் மீது ரசிகர்கள் கொண்ட அதீத பாசத்தையே காட்டுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

© 2018 Vettipo | All Rights Reserved.